news

“A Lion is Always a Lion” – சிங்கக் கதையால் தொடங்கி, விஜயகாந்த் நினைவால் நிறைவு செய்த விஜய்!

  • 22-08-2025
  • 10:20:41 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்ட நிலையில், இன்று மதியம் 3 மணிக்கு மங்கள இசையுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டுப் பாடலில் விஜயின் குரல் இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக, வெளியிடப்பட்ட மாநாட்டுப் பாடலில் தளபதி விஜயே பாடியிருந்தார். அதில் இடம்பெற்ற “சாதி எனும் சாக்கட இங்க… மதவாதம் ஏறுது மெல்ல…” என்ற வரிகள் பெரும் கவனத்தை பெற்றன. மேடையில் அறிஞர் அண்ணா – எம்ஜிஆர் நடுவே விஜய் மாநாட்டின் மேடை முகப்பில் அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகைப்படங்களுக்கு நடுவே விஜயின் படம் வைக்கப்பட்டது. “வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்தோடு வந்த இக்காட்சி, விஜயின் அரசியல் பயணத்திற்கு பெரும் சின்னமாக இருந்தது.35 நிமிடங்கள் பேசிய விஜய் – “சிங்கம்” உவமை விஜயின் பேச்சு கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் நீடித்தது. அதில் அவர் சிங்கத்தை உவமையாக எடுத்துக்கொண்டு, “சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வரும்; வேடிக்கை பார்க்காது. எதையும் எளிதில் தொடாது; ஆனால் தொடினால் விடாது. A LION IS ALWAYS A LION… EVEN IF IT IS SINGLE, IT IS KING OF THE JUNGLE” என்று உரையாற்றினார். விஜயகாந்தை நினைவு கூர்ந்த விஜய் மதுரை குறித்து பேசும் போதே, புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்தை அன்புடன் நினைவு கூர்ந்தார். “என் அண்ணன், என் தோழன், என் உந்துசக்தி – புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். மதுரை மண்ணை சேர்ந்த அவரை மறக்க முடியுமா?” என்று உருக்கமாகப் பேசியதில், கூட்டத்தில் இருந்தோர் ஆரவாரம் எழுப்பினர். திமுக குறித்து: “My Dear Uncle… சொல்லுங்க… உங்க ஆட்சியில் ஊழல் இல்லையா? பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்தால் போதுமா? பாதுகாப்பு இல்லையே Uncle!” என்று கிண்டலாகக் கேட்டார். அதிமுக குறித்து: “எம்.ஜி.ஆர். மகத்துவம் இன்று தொண்டர்களுக்கே சொல்ல முடியாத நிலை. அந்த கட்சி இவ்வாறு சிதைந்திருப்பது வேதனை அளிக்கிறது” என்றார். பாஜக குறித்து: “பாசிச பாஜக உடன் எங்களால் கூட்டணி சாத்தியமில்லை. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாட்டை அழிக்க நினைத்தால் எதிர்ப்போம். RSS-ஐ அடிமையாக்க மாட்டோம்” என்று வலியுறுத்தினார்.“அரசியலுக்கு அடைக்கலம் தேடி வரவில்லை “30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் இருந்து பெற்ற அன்புக்கான நன்றிக்கடன் செலுத்த தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் அடைக்கலம் தேடி வரவில்லை; இது என் வாழ்வின் கடமை” என்று தெரிவித்தார். வழக்கம்போல் குட்டிக்கதை சொல்லிய விஜய், “அவித்த விதை நெல்லை வளர்க்க முடியாமல், உண்மையை வெளிப்படுத்தியவன் தளபதி ஆனான்” என்ற கதையை எடுத்துக்கொண்டு, “மக்கள் அரசியலில் உண்மை மட்டுமே வெற்றிபெறும்” என்ற செய்தியை வலியுறுத்தினார்.

  • தமிழ்நாடு

Comments

    ..

Write Your Comments

Recent News