கோவை மாவட்டம் சர்கார்சாமக்குளம் ஒன்றியம் அத்திப்பாளையம், வையம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள நமது பாரத தேசம் சுதந்திரம் பெற்ற 1947 ம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரா மேல் நிலைப்பள்ளியில் 1974 ம் ஆண்டு பயின்ற மாணவ மாணவியர் 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 77வது குடியரசு தின நாளில் """" மீண்டும் இணைவோம்""" நிகழ்ச்சியை சுமார் 52 வருடங்களுக்கு பின்பு பள்ளி வளாகத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளியின் கல்வி சுகாதார அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் அழைப்பை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலை 9.00 மணிக்கு துவங்கி 50 மரக் கன்றுகள் நடுதல், முன்னாள் ஆசிரியர்கள் 11 பேருக்கு நினைவுப் பரிசு வழங்குதல், பள்ளியில் உள்ள மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவியர் , குழந்தைகள் பள்ளி மாணவ மாணவியர் ஆகியோர் மாநில மாவட்ட அளவில் நடைபெற்ற கலை நிகழ்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 26 மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்குதல், மற்றும் சக மாணவ மாணவியர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழா மதியம் 12.30 மணிக்கு நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது. மதிய உணவுக்கு பின்பு சகமாணவர் குடும்பங்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடை பெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு சக மாணவர் ரமேஷ்குமார், பள்ளி கல்வி சுகாதார அபிவிருத்தி சங்க செயலாளர் ராஜகோபால், முன்னாள் மாணவர்கள் ரங்கநாதன், ரகுபதி, திருமூர்த்தி, வேலுமணி மாணவியர் நிர்மலா, கலாமணி , சுகந்தா, ஜெயலட்சுமி, சிவபாக்கியம் மற்றும் இதர சக மாணவ மாணவியர் குழுவினர் சீருடை அணிந்து அனைத்து நிகழ்ச்சிகளை செவ்வனே நடத்தி நிறைவு செய்தனர். முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களது கடந்த கால ஆசிரிய , மாணவ பருவத்தின் மகிழ்வான தருணங்களை நினைவு கூர்ந்து உரையாற்றி மகிழ்ந்தனர். முன்னால் இன்னால் பள்ளி முதல்வர்கள் ஆசிரியர்கள் பள்ளியில் பணிபுரிபவர்கள் 95 பேருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. வருகை புரிந்த அனைவருக்கும் காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை உணவு ஏற்பாடுகளையும் சக மாணவர் திருமூர்த்தி உபயதாரராக அவர் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
..