news

பிரிட்டன் வரி சுமையால் அதிர்ந்த மிட்டல்: துபாய்க்கு இடம்பெயரத் தயாராகும் உலக கோடீஸ்வரர்

  • 24-11-2025
  • 03:29:39 PM

பிரிட்டன் அரசின் புதிய வரிவிதிப்பு மாற்றங்கள் உலகளாவிய முதலாளித்துவ வட்டாரங்களில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நாட்டில் உயர் வருமானம் பெறும் தொழிலதிபர்களுக்கும் குடும்ப வாரிசு தொழில்களுக்கும் கூடுதல் வரி சுமைகள் அறிவிக்கப்பட்டதால் பலர் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில், உலகின் முன்னணி உருக்கு நிறுவனமான ‘ஆர்சிலோர் மிட்டல்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் இந்திய மூலத்தை சேர்ந்த பிரபல கோடீஸ்வரர் லட்சுமி மிட்டல் துபாய்க்கு இடம்பெயர உள்ளார் என்ற தகவல் தற்போது சர்வதேச ஊடகங்களில் பரவலாக வெளியாகியுள்ளது. லட்சுமி மிட்டலின் வாழ்க்கை மற்றும் தொழில் பயணம் ராஜஸ்தானை சேர்ந்த லட்சுமி மிட்டல், 1980களின் இறுதியில் பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து லண்டன் நகரத்தில் வசித்து வந்தார். ஆசியாவின் சிறிய அளவிலான தொழிற்சாலை வியாபாரத்தில் தொடங்கி, உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளர்களில் ஒருவராக உயர்ந்த மிட்டல், தனது தொழிலை பல கண்டங்களிலும் விரிவாக்கினார். அவரது ‘ஆர்சிலோர் மிட்டல்’ நிறுவனம் இன்று 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு, உலக எஃகு தொழில்துறையில் முன்னணியில் திகழ்கிறது. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த சாதனைகளால் லட்சுமி மிட்டல், பிரிட்டனில் உள்ள எட்டாவது பெரிய பணக்காரராக கருதப்படுகிறார். தொழில்வசதிகளுக்காக அண்மையில் அவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தாலும், பிரிட்டனில் முக்கிய முதலீடுகள் மற்றும் குடும்ப சொத்துக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. பிரிட்டன் அரசின் புதிய வரி மாற்றங்கள் – தொழிலதிபர்களின் அதிருப்தி கடந்த ஆண்டில் பிரிட்டன் அரசு தொழிலதிபர்கள் மற்றும் உயர்ந்த வருமானம் பெறுவோர்களுக்கான வரி விகிதங்களை கணிசமாக உயர்த்தியது. குறிப்பாக, குடும்ப தொழில்களை வாரிசுகளுக்கு மாற்றும் போது ‘Inheritance Tax (வாரிசு வரி)’ கட்டாயம், சொத்து, வருமானம், முதலீடு ஆகியவற்றிற்கு பல புதிய வரி கட்டணங்கள், மேலும், நாட்டை விட்டு வெளியேறும் தொழிலதிபர்களுக்கு 20% ‘Exit Tax’ விதிக்கப்படும் என்ற தகவல் வரவிருக்கும் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. இந்த புதிய முடிவுகள் நாட்டின் முன்னணி முதலாளிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. பல தொழிலதிபர்கள் குறைந்த வரிசுமை கொண்ட நாடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்து வருகின்றனர். மிட்டலின் துபாய் திட்டம் இந்த வரிசையில், லட்சுமி மிட்டலின் முடிவும் உடனடி சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. தகவலின்படி, அவருக்கு துபாயில் ஏற்கனவே பிரமாண்டமான ஒரு மாளிகை உள்ளது. அதோடு, ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் ‘நயா தீவில்’ மிகப்பெரிய நிலப்பரப்பையும் வாங்கியுள்ளார். வரி சுமைகளில் இருந்து விடுபடவும், துபாய் வழங்கும் முதலீட்டுக்கான சலுகைகளாலும், தொழில் வளர்ச்சிக்கான சுதந்திர சூழலாலும் அவர் அங்கு நிரந்தரமாக குடியேற உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச முதலீட்டுக்கு பிரிட்டன் கொடுக்கும் புதிய சவால் இந்தச் சம்பவம், “உலகின் முதலீட்டுக்கான பாதுகாப்பான தளமாக” விளங்கிய பிரிட்டனின் கவர்ச்சியை குறைக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். லட்சுமி மிட்டல் போன்ற உலக அளவிலான முதலாளிகள் நாடை விட்டு வெளியேறுவது, பிரிட்டனின் முதலீட்டு சூழலில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும்.

  • உலகம்

Comments

    ..

Write Your Comments

Recent News