தெலுங்கானாவில் இன்று (டிச.,04) காலை 7.27 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் திருவூரு, ஜக்கையா பேட்டை, ஹைதராபாத், ஹனுமகொண்டா, கம்மம், பத்ராத்ரி, உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகி உள்ளது. ஆந்திராவிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
..