news

பஞ்சாப் வெள்ளத்துக்கு ரிலையன்ஸ் 10 அம்ச நிவாரண திட்டம் – 10,000 குடும்பங்களுக்கு உதவி அறிவிப்பு

  • 11-09-2025
  • 11:33:29 AM

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பதான்கோட், குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், சுல்தான்பூர் லோதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை, வாழ்வாதாரங்களை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவி வழங்கும் நோக்கில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10 அம்ச நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது. 10,000 குடும்பங்களுக்கு நேரடி உதவி இந்த திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன. அதேசமயம், தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ள 1,000 வீடுகளுக்கு ரூ.5,000 மதிப்பிலான வவுச்சர் உதவி வழங்கப்படுகிறது. ஆனந்த் அம்பானி அறிவிப்பு இந்நிகழ்ச்சியை அறிவித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் ஆனந்த் அம்பானி, செய்தி குறிப்பில், “பஞ்சாப் மாநில மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர். வீடுகள், வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து வருந்தும் மக்களின் பக்கத்தில் முழு ரிலையன்ஸ் குடும்பமும் தோளோடு தோள் நின்று நிற்கிறது. உணவு, தங்குமிடம், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு போன்ற அனைத்து துறைகளிலும் நாங்கள் உதவிக்கரம் நீட்டுகிறோம். பஞ்சாப் உடன் நிற்கும் உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்று தெரிவித்தார். திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜியோ மற்றும் வந்தாரா ஆகியவை இணைந்து இந்த நிவாரணத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் – ரேஷன் பொருட்கள், உடனடி உணவுப் பொருட்கள். வவுச்சர் உதவி – பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ள 1,000 வீடுகளுக்கு ரூ.5,000 மதிப்பில். அவசர தங்குமிட உபகரணங்கள் – தார்பாய், படுக்கை, கொசு வலை, கயிறு போன்றவை. நீர் சுத்திகரிப்பு கருவிகள் – நீரால் பரவும் நோய்களைத் தடுக்க. சுகாதார முகாம்கள் – வெள்ளத்திற்குப் பிந்தைய நோய் தடுப்பு முகாம்கள். சுகாதார பெட்டகம் – ஒவ்வொரு குடும்பத்திற்கும் 21 வகையான அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள். கால்நடை பராமரிப்பு முகாம்கள் – மருந்துகள், தடுப்பூசிகள், உணவு. விலங்கு மீட்பு மற்றும் சிகிச்சை – வந்தாரா குழுவின் பங்களிப்பு. இறந்த கால்நடைகளின் இறுதிச் சடங்குகள் – சுகாதார பாதுகாப்பு முறையில். நெட்வொர்க் சேவை மீட்பு – ஜியோ குழு தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் இணைந்து பணிபுரிகிறது. நீண்டகால மறுவாழ்வு நோக்கம் இந்த திட்டம் வெறும் உடனடி நிவாரணத்திற்காக மட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட மக்களின் நீண்டகால மறுவாழ்வை மையப்படுத்தி செயல்படுத்தப்படுவதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல், உள்ளூர் பஞ்சாயத்துகள் மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து மிகவும் தேவைப்படும் குடும்பங்களுக்கு நேரடியாக உதவி வழங்கி வருகின்றன. பஞ்சாப் முழுவதும் பரவலான பாராட்டை பெற்றுள்ள இந்த திட்டம், பேரிடர் காலங்களில் தனியார் நிறுவனங்கள் சமூகத்துக்காக எடுக்கக்கூடிய முன்னுதாரண முயற்சி எனக் கருதப்படுகிறது.

  • இந்தியா

Comments

    ..

Write Your Comments

Recent News