news

தனுஷின் ‘குபேரா’ – ஒரு உணர்வுப் பூர்வமான பயணம்!

  • 11-06-2025
  • 03:01:56 PM

தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் அவருக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என கூறியுள்ளார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும், நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், படத்தைப் பற்றிய தனது உணர்வுகளை பகிர்ந்தார். “குபேரா எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இதற்காக நான் அதிக ஹோம்வொர்க் செய்தேன் என சொல்வது பொய். இயக்குனர் சொல்வதையே நம்பி நடித்தேன். ஆனால் இதுபோன்ற ஒரு படத்திற்கு வலுவான ப்ரோமோஷன் தேவை. அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார் அவர். தனுஷின் பேச்சுகள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சாதாரணமாக தனது படங்களைப் பற்றிப் பெரிதாக பேசாத தனுஷ், இப்போது “குபேரா”வை மிகுந்த நம்பிக்கையுடன் பேசியிருப்பது, இப்படத்தில் உண்மையில் ஏதாவது மாயம் இருக்கிறதோ என எண்ண வைக்கிறது. மேலும், சென்னை மற்றும் மும்பையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. கடந்த வாரம் வெளியான டீசர், ரசிகர்களிடம் சூப்பர் ஹிட் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ட்ரைலருக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. “குபேரா” திரைப்படம் தனுஷின் நடிப்பிலும், இயக்குனர் சேகர் கம்முலாவின் தனித்துவமான கதையிலும் ஒரு பிலாக்பஸ்டர் ஹிட் படமாக மாறும் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

  • சினிமா

Comments

    ..

Write Your Comments

Recent News