news

தமிழக அரசு புதிய உத்தரவு: ஹோட்டல்–உணவக ஊழியர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்

  • 24-11-2025
  • 11:45:17 AM

தமிழக அரசு, பொதுமக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்தில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயமாக காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி (Influenza Vaccine) செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு & மருந்து நிர்வாகத் துறை (FSSAI – Tamil Nadu) விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உணவகங்களில் உணவு பாதுகாப்பு தரத்தை உயர்த்தவும், நோய் தொற்று பரவலை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. உணவக உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின் படி உணவக உரிமையாளர்கள் பின்வரும் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: உரிமம் & புதுப்பிப்பு அனைத்து ஹோட்டல்கள், பேக்கரிகள், உணவகங்கள், கேட்டரிங் சேவைகள் உள்ளிட்டவை உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமத்தை காலவரையறைக்குள் புதுப்பித்தல் கட்டாயம். செயற்கை நிறமூட்டிகள் தடை எந்தவொரு உணவிலும் செயற்கை நிறமூட்டிகள் அல்லது அனுமதிக்கப்படாத சேர்க்கைகள் பயன்படுத்தக் கூடாது. இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். ஊழியர்களின் சுகாதார நிலை உணவு சமைப்போர் மற்றும் பரிமாறுவோர் காய்ச்சல், தொற்று நோய்கள் அல்லது உடல் நலக்குறைவு இல்லாமல் இருக்க வேண்டும். தொடர்ச்சியான சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். உணவு தயாரிப்பில் பின்பற்ற வேண்டிய சுத்தம் & பாதுகாப்பு நடைமுறைகள் உணவு சமைக்கும் மற்றும் பரிமாறும் நேரங்களில்: கையுறை (Gloves) அணிதல் கட்டாயம் தலையுறை (Head Cap) அணிதல் கட்டாயம் சமைக்கும் பகுதி, உணவு சேமிப்பு கிடங்கு, கை கழுவும் இடம், பாத்திர சுத்திகரிப்பு பகுதி, கழிவறை போன்றவை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் தடுப்பூசி: 2 வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் அனைத்து ஹோட்டல் மற்றும் உணவக ஊழியர்களும்: காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி 2 ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கான தலா ₹500 தொகையை ஹோட்டல் உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள், மாவட்ட அதிகாரிகள் ஆகியோர் மருத்துவச் சான்றிதழ்களை நேரில் ஆய்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் தமிழக அரசின் முக்கிய நடவடிக்கை மக்களின் ஆரோக்கியம், உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரநிலை மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த கட்டாய தடுப்பூசி நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் உணவு தயாரிப்பு மையங்கள் அவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

  • தமிழ்நாடு

Comments

    ..

Write Your Comments

Recent News