news

வலது மார்பில் புதிய டாட்டூ குத்திய அஜித் குமார் – இணையத்தில் தீயாய் பரவும் ஃபோட்டோ!

  • 25-10-2025
  • 05:13:17 PM

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம், பெருவெம்பா கிராமத்தில் அமைந்துள்ள ஊட்டுகுளங்கரா பகவதி அம்மன் கோயில், பல ஆண்டுகளாக அஜித் குமாரின் குடும்பத்தால் வழிபட்டுக் வரும் தெய்வம் என கூறப்படுகிறது. சமீபத்தில், புதிய படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதும், அஜித் தனது குடும்பத்தினருடன் இக்கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலில் பகவதியம்மனை தரிசித்து வழிபட்ட அஜித்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன இந்த புகைப்படங்களில் அஜித் மேலாடையின்றி நிற்கும் நிலையில், அவரது வலது மார்பில் ஒரு பச்சைக்குத்து (Tattoo) தெளிவாகக் காணப்படுகிறது. அந்த டாட்டூ, அவருடைய குல தெய்வமான பகவதியம்மனை பிரதிபலிப்பதாகவும், அதற்காகவே அவர் இதை குத்தியிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தல அஜித்தின் இந்த புது லுக் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘Good Bad Ugly’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் தற்போது தனது இரண்டாவது ஆர்வமான கார் ரேஸிங் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், அவரது அடுத்த படத்தை இயக்கவிருப்பது ஆதிக் ரவிச்சந்திரன் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மாஸ்மான கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் என்று ஆதிக் சமீபத்தில் தெரிவித்திருந்தார். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. அஜித்தின் மார்பில் டாட்டூ குத்திய புகைப்படம் வெளியாகியுள்ள சில நிமிடங்களிலேயே, ரசிகர்கள் அதை ஆயிரக்கணக்கான முறைகள் பகிர்ந்து வருகின்றனர். “தல எப்போதும் வித்தியாசமானவர்!”, “அவரின் ஆன்மீக பக்கம் இன்னொரு முறை வெளிப்பட்டது” போன்ற கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்து வருகின்றன. திரையுலகில் தனது வெற்றிப் பயணத்தையும், ஆன்மீக நம்பிக்கையையும் சமநிலையில் வைத்திருக்கும் அஜித் குமார், இன்றும் எளிமையும் உறுதியும் கொண்ட நாயகனாகவே ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறார். புதிய டாட்டூ புகைப்படம், அவரது தனித்துவத்தையும், வாழ்க்கையில் ஆன்மீகம் எவ்வளவு முக்கியம் எனும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது.

  • சினிமா

Comments

    ..

Write Your Comments

Recent News