கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்திருந்தனர். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவத்துக்குப் பிறகு த.வெ.க. நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது முக்கிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது X தளத்தில்— “இலங்கை, நேபாளம் போல் ஆட்சியின் அடுக்குமுறைக்கு எதிராக Gen Z புரட்சி எழும்” என்ற கருத்தை பதிவிட்டிருந்தார். பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டும் வழக்கு பதிவு இந்த பதிவு சமூக ஊடகங்களில் சிலரால் பகிரப்பட்டதன் பின்னர், அது ‘வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது’ என குற்றம் சாட்டப்பட்டு, சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஆதவ் அர்ஜுனா மீது IPC மற்றும் பிற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். ஆதவ் அர்ஜுனா இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்: பதிவு 34 நிமிடங்களுக்குள் நீக்கப்பட்டது எந்தவித உள்நோக்கம் இல்லாமல் கோபத்தில் பதிவிட்ட கருத்து ஆரம்பகட்ட விசாரணை இல்லாமல் வழக்கு பதிவு பதிவு நீக்கப்படவில்லை என்றாலும் கூட, “புரட்சியை உந்துதல்” என்ற குற்றம் பொருந்தாது இவர் குற்றப்பின்னணி இல்லாதவர் காவல்துறையின் வாதம் காவல்துறை தரப்பு தனது வாதத்தில்: கரூர் கூட்ட நெரிசல் நடந்த 27ம் தேதி ஆதவ் அர்ஜுனா காணாமல் போனார் 28ம் தேதி நள்ளிரவு இப்பதிவை செய்துள்ளார் நேபாளம், இலங்கை புரட்சிகளை குறிப்பது பொதுச் சமாதானத்தை குலைக்கும் தன்மை கொண்டது விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகவில்லை பதிவை forward செய்தால்கூட குற்றம் என முன்னோடியான தீர்ப்புகள் உள்ளன என வலியுறுத்தியது. நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார். இன்று வெளியான உத்தரவின் மூலம்: ஆதவ் அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
..