news

மதுரை வடக்கு தொகுதியில் சூடு பிடிக்கும் 2026 தேர்தல் – திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், வெற்றி கழக வி.ஐ.பிக்கள் மோதல்.!

  • 21-08-2025
  • 01:09:39 PM

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் பணிகள் தமிழகமெங்கும் சூடு பிடித்து வரும் நிலையில், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி தற்போது மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில், மதுரை வடக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சமூக, சாதி மற்றும் அரசியல் அடிப்படையில் பல்வேறு பிரிவினரும் அதிகமாக வசிக்கும் இந்த தொகுதியில், பல்வேறு கட்சிகளின் வி.ஐ.பிக்கள் தங்கள் வேட்புமனு ஆசைகளை வெளிப்படுத்தியுள்ளனர். .திமுக தரப்பில்: தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ. தளபதி மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல். அதேசமயம், மதுரை மாநகர் திமுக இளைஞரணி அமைப்பாளர் சவுந்தருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பேச்சு வலுவாக உள்ளது. அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரின் ஆதரவாளர்களும் தொகுதியை குறிவைத்துள்ளனர். இதனுடன், காங்கிரஸும் மதுரை வடக்கில் பங்குபெற முனைந்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில்: அதிமுக தரப்பில் டாக்டர் சரவணன் வேட்பாளராக களம் இறங்கத் தயாராக உள்ளார். ஆனால், பாஜக தரப்பில் பேராசிரியர் சீனிவாசன் போட்டியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால், தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பது கூட்டணிக்குள் சூடான விவாதமாக உள்ளது நாம் தமிழர் கட்சி: கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்ட செந்தில்குமார் மீண்டும் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, இந்த முறை பெண் வேட்பாளரை களமிறக்கவும் சீமான் தீவிரமாக யோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது தமிழக வெற்றி கழகம்: அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் விஜய் அன்பன் கல்லாணை மதுரை வடக்கில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது மொத்தத்தில், மதுரை வடக்கு தொகுதி 2026 தேர்தலில் “வி.ஐ.பி மோதல் அரங்காக” மாறி, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர், வெற்றி கழகம் என அனைத்துக் கட்சிகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

  • அரசியல்

Comments

    ..

Write Your Comments

Recent News