அரபிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி வருகின்ற 9,10 தேதிகளில் குறைந்த காற்றழுத்தமாக வலுப்பெறும் இதனை தொடர்ந்து குமரிக்கடல் பகுதியில் வருகின்ற 10,11 தேதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பிருக்கிறது இந்த நிகழ்வு அரபிக்கடல் பகுதிக்குள் நுழைந்து புயலாக வழுப்பெறும் இந்த நிகழ்வு வடகிழக்கு பருவமழையை ஈர்க்க முன்கூட்டியே தொடங்க ஏதுவாக அமையும் வருகின்ற 9 ..ஆம் தேதிக்கு பிறகு தென்இந்திய பகுதிகளுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பிருக்கிறது . தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் காற்று மற்றும் இடியுடன் கூடிய பரவலான கனமழைக்கு இன்று இரவு மற்றும் நள்ளிரவு வாய்ப்பில்லை இன்று ஒருசில இடங்களில் மட்டுமே மழையை கொடுத்திருக்கிறது நாளை அதிகாலை சற்று பரவலான கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது . வெப்பச்சலனம் காரணமாக தற்போது மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் திருவண்ணாமலை சேலம் பெரம்பலூர் கோவை திருப்பூர் திண்டுக்கல் சிவகங்கை புதுச்சேரி மற்றும் சென்னையில் பரவலான கனமழைக்கு இன்று இரவு மற்றும் நள்ளிரவு வாய்ப்பில்லை காரைக்கால் , நாகை, திருவாரூர் , மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் காற்று மற்றும் இடியுடன் கூடிய பரவலான கனமழைக்கு இன்று இரவு மற்றும் நள்ளிரவு வாய்ப்பில்லை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தற்போது மிதமானது முதல் சற்று கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. அரபிக்கடலோர பகுதிகளில் பரவலாக கனமழை மற்றும் தொடர்மழைக்கு வாய்ப்பிருக்கிறது கேரளா மாஹே(புதுச்சேரி) தெற்கு கர்நாடகா மஹாராஸ்டிரா இலங்கையிலும் இன்று இரவு மற்றும் நள்ளிரவு பரவலாக கனமழை மற்றும் தொடர்மழைக்கு வாய்ப்பிருக்கிறது
..